PM visits International Rice Research Institute in Philippines

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் லாஸ் பானோஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அரிசி அறிவியல் மூலம் வறுமையை குறைத்தல்; அரிசி விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்; மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அரிசி விளைவிக்கும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்றவற்றிற்கு அர்ப்பணித்துள்ள முதன்மையான நிறுவனமாகும்.

வெள்ளத்தை தாங்கும் அரிசி வகைகள்; வறட்சியை தாங்கும் அரிசி வகைகள்; உப்புத்தண்ணீரை தாங்கும் அரிசி வகைகளின் புகைப்பட கண்காட்சியையும்; மற்றும் மகளிர் விவசாய கூட்டுறவுகளில் ஐ.ஆர்.ஆர்.ஐ.-ன் பணிகள் குறித்தும் பிரதமர் பார்வையிட்டார்.

நீரில் மூழ்குவதை தாங்கும் அரிசி வகைகளுக்கான புதிய ஆராய்ச்சிக் கூடத்திற்கான அடையாள மண் தோண்டுதலை பிரதமர் மேற்கொண்டார். திரு. நரேந்திர மோடி அரிசி கள ஆராய்ச்சிக்கூடத்தின் பெயர்ப் பலகையையும் அவர் திறந்து வைத்தார். ஐ.ஆர்.ஆர்.ஐ. மரபு வங்கிக்கு இந்தியாவின் இரு வகை அரசி விதைகளை பிரதமர் அளிப்பாக அளித்தார்.

விஜயத்தின்போது, ஐ.ஆர்.ஆர்.ஐ.-ல் பணியாற்றும் பல்வேறு இந்திய அறிவியலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi