வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வருகை தந்தார். அங்கு அவர், பண்டிட் மதன் மோகன் மாளவியா சிலையையும், வாரணாசி மலையின் சுவர் ஓவியங்களையும் திறந்து வைத்தார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக் மற்றும் முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மருத்துவமனையையும் லெஹர்தாராவின் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையையும் பிரதமர் துவக்கி வைத்தார். இந்த மருத்துவமனை மூலம் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார் மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படும்.
துல்லியமான தொழில்நுட்பம் கொண்ட முதல் பாபாடிரான்-ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பகலில் நோயாளிகளைப் பராமரிக்கும் பிரிவு மற்றும் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை பார்வையிட்ட பிரதமர் நோயாளிகளுடன் கலந்து உரையாடினார்.
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.