மே 25, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். சாந்திநிகேதனில் இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் கலாச்சார உறவின் சின்னமான வங்காளதேச பவனை பிரதமர் துவக்கி வைக்க இருக்கிறார். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வங்கதேசப் பிரதமர் திருமதி. ஷேக் அசீனா பங்கேற்க உள்ளார்.
ஜார்கண்ட் சிந்திரியில் மத்திய மற்றும் ஜார்கண்ட் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதில்:
- இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன் நிறுவனத்தின் சிந்திரி உரங்கள் திட்டத்தின் மீட்டுயிர்ப்பு
- கெயிலின் ராஞ்சி மாநகர எரிவாயு விநியோகத்திட்டம்
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), தியோகர்
- தியோகர் விமான நிலையம் மேம்பாடு
- பத்ரத்ரு சூப்பர் அனல்மின் திட்டம் (3 X 800 மெகாவாட்)
மக்கள் மருந்து மையங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தப் பறிமாற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.
மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.
பிறகு ராஞ்சியில் ஜார்க்கண்டின் “உயரவிழையும் மாவட்ட” ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.