பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (28.06.2018) உத்தரபிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் நகர் மாவட்டத்துக்கு செல்கிறார்.
பிரதமர் சந்த் கபீர் சமாதியில் அவரது 500-வது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். சந்த் கபீர் கல்லறையில் பிரதமர் மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்துகிறார்.
பிரதமர், சந்த் கபீர் குகைக்கும் சென்று பார்க்கிறார். கபீரின் போதனைகளையும் சிந்தனைகளையும் பிரபலப்படுத்துவதற்காக அமைக்கப்பட உள்ள கபீர் அகாடமியின் அடிக்கல்லை நாட்டும் வகையிலான நினைவு பலகையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
பின்னர், மாகார் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் காண்கிறார்.