ஜனவரி 3 ஆம் தேதியன்று 2019 பிரதமர் திரு. நரேந்திர மோடி பஞ்சாபிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜனவரி 3 அன்று பஞ்சாப் ஜலந்தரில் 106வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் துவக்கிவைத்து, துவக்க உரையாற்றுவார். பிறகு பஞ்சாப் குர்தாஸ்பூருக்கு செல்லும் அவர், பொது கூட்டத்தில் உரையாற்றுவார்.
பிரதமரின் தொலைநோக்கு பார்வையான நாடு முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உத்வேகம் அளிக்கும் வகையில், பிரதமர் திரு. மோடி பதவியேற்றது முதல், இது அவர் பங்கேற்கும் ஐந்தாவது இந்திய அறிவியல் மாநாடாகும். 2018-ல் நடைபெற்ற 105 ஆவது மாநாட்டிலும், 2017-ல் நடைபெற்ற 104 மாநாடு, 2016-ல் நடைபெற்ற 103 மாநாடு மற்றும் 2015-ல் நடைபெற்ற 102 மாநாடுகளில் பிரதமர் துவக்க உரையாற்றியுள்ளார்.