ஒடிசாவில் தால்செர் என்ற இடத்தில் அவர் தல்செர் உரத் தொழிற்சாலையில் பணி தொடங்கியதைக் குறிக்கும் வகையில் பெயர்ப் பலகையைத் திறந்து வைக்கிறார். இதுதான் இந்தியாவின் முதல் உரத்தொழிற்சாலை ஆகும். நிலக்கரி ஆவியில் தயாரிக்கப்படும் உரமாகும். இந்த ஆலை உரத்துடன் நாட்டின் மின்சாரத் தேவையை ஈடு செய்யும் வகையில், இயற்கை எரிவாயுவையும் உற்பத்தி செய்யும்.
அதன் பின் பிரதமர் ஜர்ஸுகுடா என்ற இடத்துக்குச் செல்கிறார். அங்கே ஜர்சுகுடா விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். இதன் மூலம் மேற்கு ஒடிசா மண்டலத்தில் விமான நிலையம் அமையும். உதான் திட்டத்தின் மூலம் மண்டல அளவிலான இணைப்புக்கு வசதி அமையும்.
அத்துடன், கர்ஜன்பஹால் என்ற இடத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தை முறைப்படி அர்ப்பணிக்கிறார். ஜர்சுகுடா – பாரபள்ளி – சர்டேகா இடையிலான ரயில் போக்குவரத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். துலங்கா நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து ஆகியவை தொடங்குவதை ஒட்டி, பெயர்ப் பலகையையும் அர்ப்பணிக்கிறார்.
அதையடுத்து, சத்தீஸ்கரில் உள்ள பிரதமர் ஜன்ஜகிர்சம்மா என்ற இடத்திற்குச் செல்கிறார். அங்கு கைத்தறி மற்றும் வேளாண்துறை கண்காட்சிக்குச் செல்கிறார்.. அங்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கும் பென்ட்ரா – அனுப்பூர் இடையில் மூன்றாவது ரயில் பாதைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மக்களிடையில் அவர் உரையாற்றுகிறார்.