பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை மும்பை செல்கிறார். அங்கு, ஆசியா மற்றும் அதற்கு அப்பால் சமூக-பொருளாதார விளைவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் பன்நோக்கு வளர்ச்சி வங்கியான ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3-வது வருடாந்திர கூட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
“கட்டமைப்புக்கு நிதி திரட்டுதல் : கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு” என்பதே இந்தாண்டு கூட்டத்தின் மையக் கருத்தாகும். பல தரப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசாங்க அளவிலான தலைவர்கள், வலுவான கட்டமைப்பு முதலீடுகள் மூலம் நீடித்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர்.
இந்த ஆண்டு, ஆசிய கட்டமைப்பு அமைப்பு ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. செய்முறை மற்றும் திட்டம் சார்ந்த, கட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் ஒன்று திரள உள்ள இந்த புதிய அமைப்பு, முக்கியமான கட்டமைப்பு தேவைகளுக்கான நிதி ஆதாரத்தை உருவாக்குவதில் இந்த அமைப்பு கவனம் செலுத்தும்.
அதன் பிறகு, தொழிலதிபர்கள் மற்றும் தொழில் துறை முன்னோடிகளை சந்திக்கும் பிரதமர், பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, கொள்கை முன்முயற்சிகள், முதலீடு, கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கலந்துரையாட உள்ளார்.