மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 4, 2019 அன்று பயணம் மேற்கொள்கிறார்.
அவர், மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். மொறேயில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி, சவோம்பங்கில் இந்திய உணவு கழகத்தின் உணவு சேமிப்பு கிடங்கு, தோளைதாபி குறுக்கு அணைத் திட்டம், தங்கல்சுருகண்டில் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா வளாகம் மற்றும் பல்வேறு நீர் விநியோகத் திட்டங்களை தொடக்கிவைக்கும் வகையில் பிரதமர் கல்வெட்டினைத் திறந்து வைக்கிறார்.
சில்சார்-இம்பால் இடையேயான 400 கிலோ வாட் திறன் கொண்ட இரட்டை முனை மின் சுற்றுப் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
இம்பால் தனமஞ்சுரி பல்கலைக்கழகங்கத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு, விளையாட்டு திடல்கள் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பிறகு, கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள ஹப்தாகங்ஜேபுங்கில் பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.
அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள ராம்நகரில் பொதுமக்கள் பேரணியில் பிரதமர் உரையாற்றுகிறார்.