பிப்ரவரி 18, 19 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிப்ரவரி 18, மதியம் மும்பைக்கு வந்தடையும் பிரதமர், நேவி மும்பையின் சர்வதேச விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவார். அந்நிகழ்ச்சியின்போது, அவர் ஜெ.என்.பி.டி-யில் உள்ள நான்காவது சரக்குப் பெட்டக முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு – “மேக்னடிக் மகாராஷ்டிரா: கன்வர்ஜன்ஸ் 2018” விழாவில் பிரதமர் தொடக்க உரையாற்றுவார். மும்பை பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவிற்கான வாத்வாணி நிறுவனத்தைத் தொடங்கிவைக்க உள்ளார்.
பிறகு, பிரதமர் கர்நாடகாவில் உள்ள மைசூருவிற்கு பயணம் மேற்கொள்வார். பிப்ரவரி 19, ஐதராபாத்தில் நடைபெற உள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான உலக மாநாட்டில், காணொளி மூலம் உரையாற்றுவார்.
ஷ்ரவணபெலகோலாவில் நடைபெறவுள்ள பாகுபலி மஹாமஹ்தக் அபிஷேக மகாஉற்சவத்தில் பிரதமர் பங்கேற்க உள்ளார். மைசூரு ரயில் நிலையத்தில் நடைபெறஉள்ள விழாவின்போது, அவர் மின்மயமாக்கப்பட்ட மைசூரு – பெங்களூரு ரயில் பாதையை நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மைசூரு மற்றும் உதய்பூர் இடையே பேலஸ் குவீன் ஹம்சபார் விரைவு பாதையையும் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். பின்னர், மைசூருவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.