இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் பகுதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிலாஸ்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு (எய்ம்ஸ்) பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். 750 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனை, சுமார் ரூ.1,350 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இங்கு மருத்துவ சிகிச்சையோடு, மருத்துவக் கல்வியும் வழங்கப்பட உள்ளது. அதில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்போடு, நர்சிங் கல்வியும் அளிக்கப்பட உள்ளது.
உனா நகரில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு (IIIT) பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும், கங்கிராவின் கந்த்ரோரி பகுதியில் இந்திய உருக்கு ஆணையத்தின் உருக்கு தயாரிக்கும் அலகையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.
பின்னர் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.