பிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை, 2017, அக்டோபர் 14 அன்று பீகார் செல்கிறார்.
பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
மோகாமாவில், நமாமி கங்கைத் திட்டத்தின் கீழ் நான்கு கழிவுநீர் திட்டங்கள் மற்றும் நான்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டங்களின் மொத்த ஒதுக்கீடு ரூ.3700 கோடிக்கும் அதிகமாகும். பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார்.
இத்திட்டங்களில், பீயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, பீயூரில் கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் பாதை இணைப்பு, கர்மாலிசாக்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சயீத்பூரில் கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் பாதை இணைப்பு ஆகிய நான்கு திட்டங்களும் அடங்கும். இத்திட்டங்கள் ஒட்டுமொத்தமாக புதிதாக 120 எம்.எல்.டீ. திறன் கொண்ட கழிநீர் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்குவதுடன், பீயூரில் தற்போதைய 20 எம்.எல்.டீ-யின் தரத்தினை உயர்த்தும்.
அடிக்கல் நாட்டப்பட உள்ள நான்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்:
- தேசிய நெடுஞ்சாலை 31-ல் அவுண்டா-சிமாரியா பகுதியை 4 வழிச்சாலையாக்கல் மற்றும் 6 வழித்தடங்கள் கொண்ட கங்கா சேது கட்டுதல்
- தேசிய நெடுஞ்சாலை 31-ல் பக்தியார்பூர்-மோகாமா பகுதியை 4 வழிச்சாலையாக்கல்
- தேசிய நெடுஞ்சாலை 107-ல் மகேஷ்குந்த்-சஹார்ஸா-பூர்னியா பகுதியில் 2 வழித்தடங்கள் கட்டுதல்
- தேசிய நெடுஞ்சாலை 82-ல் பீகார்ஷரீப்-பார்பீகா-மோகாமா பகுதியில் 2 வழித்தடங்கள் கட்டுதல்