நாளை காலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை வாரணாசியில் வரவேற்கவுள்ளார்.
இரு தலைவர்களும் அங்கிருந்து மிர்ஸாபூர் செல்வர். அங்கு அவர்கள் சூரிய மின்சக்தி நிலையத்தை துவக்கிவைத்தபின் வாரணாசி திரும்புவர்.
வாரணாசியில் இரு தலைவர்களும் தீன் தயாள் ஹஸ்தகலா சங்குலை பார்வையிடுகின்றனர். அங்கு கைவினை கலைஞர்களுடன் இரு தலைவர்களும் கலந்துரையாடுகின்றனர். மேலும், கைவினை கலைஞர்கள் கலைநயம் மிக்க பொருட்களை உருவாக்குவதை நேரில் காண்பர்.
வாராணாசியில் மிகவும் புகழ்பெற்ற அஸ்ஸி படித்துறையை பார்வையிடுகின்றனர். அங்கிருந்து அவர்கள் கங்கையில் படகு சவாரி மேற்கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க தசவசுவமேத படித்துறையை பார்வையிடுவர்.
பிரான்ஸ் அதிபரை கவுரவிக்கும் வகையில் பிரதமர் மோடி அவருக்கு மதிய விருந்து அளிக்கிறார்.
மதியம், வாரணாசி மதுவாடி ரயில் நிலையத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் ரயிலை பிரதமர் கொடி அசைத்து துவக்கிவைக்கிறார். மேலும், வாரணாசியில் அமைந்துள்ள டி.எல்.டபிள்யூ. மைதானத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கிவைத்து பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.