பிரதமர் திரு. நரேந்திர மோடி, செப்டம்பர் 20, 2018 அன்று புது தில்லியில் உள்ள துவாரக்காவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்ட உள்ளார். அதன் பின் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றுவார்.
துவாரகாவில் உள்ள செக்டார் 25-ல் அமைய உள்ள இந்த மையம் உலகத் தரம் வாய்ந்த கலைக் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கமாக இருக்கும். நிதி, விருந்தோம்பல் மற்றும் சில்லறை சேவை போன்ற வசதிகள் இந்த மையத்தில் இருக்கும். இதற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ. 25,700 கோடியாகும்.
இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் லிமிடெட் நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்றும். இந்த நிறுவனம் 100 சதவீதம் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறைக்கு சொந்தமானது.