QuotePM to launch special digital exhibition marking 100 years of Champaran Satyagraha

“சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) – தேசத் தந்தைக்கான மரியாதை – ஒரு இயக்கம், ஒரு கண்காட்சி” எனும் தலைப்பில் புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். மகாத்மா காந்தியடிகள் முதல் முதலாக சம்பாரனில் நடத்திய சத்தியாகிரகத்தின் 100 ஆண்டு நிறைவையொட்டி இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி தேசிய காப்பகம் நடத்தும் “நேரலையில் இணைய வழியில் கலந்துரையாடக்கூடிய வினாடி வினா” நிகழ்ச்சியை துவக்கி வைப்பார்.

இந்த கண்காட்சி குறித்து பிரதமர் தனது டுவிட்டரில் தொடர் பதிவுகளை பதிவு செய்துள்ளார். அதில், சம்பாரன் சத்தியாகிரகம் பெரும் மாற்றத்தை அளித்த வரலாற்று இயக்கமாகும் என்று கூறிய பிரதமர் தூய்மை இந்தியாவை உருவாக்க பொது மக்கள் தூய்மை போராட்டக்காரர்களாக மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“வரலாற்று சிறப்பு மிக்க சம்பாரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு நிறைவை குறிக்கும் கண்காட்சியான “சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) – தேசத் தந்தைக்கான மரியாதை” எனும் சிறப்பு கண்காட்சியில் நாளை பங்கேற்கிறேன்.

சம்பாரன் சத்தியாகிரகத்தை எடுத்துரைக்கும் இந்த கண்காட்சியில் சுவச்சகிரகா (தூய்மைபோராட்டம்) மற்றும் சத்தியாகிரகத்தின் கொள்கைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் எடுத்துரைக்கும்.

தூய்மையான இந்தியாவை உருவாக்க தேவைப்படும் பேரியக்கத்தை தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இந்த கண்காட்சி எடுத்துரைக்கும்.

நூற்றாண்டிற்கு முன் இந்தியர்கள் அறவழி போராட்டக்காரர்களாக மாறி காலனித்துவத்தை எதிர்த்து போராடினர். இன்று, நாம் தூய்மை போராட்டக்காரர்களாக மாறி தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்.

சம்பாரன் சத்தியாகிரகம் தேசத் தந்தை தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மக்கள் இயக்கம். அதன் தாக்கங்கள் மிகப்பெரிது”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India receives over $100 billion remittances for three consecutive years

Media Coverage

India receives over $100 billion remittances for three consecutive years
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM pays tributes to His Holiness Dr. Sree Sree Sree Sivakumara Swamigalu on his Jayanti
April 01, 2025

The Prime Minister Shri Narendra Modi paid tributes to His Holiness Dr. Sree Sree Sree Sivakumara Swamigalu on the special occasion of his Jayanti today. Hailing his extraordinary efforts, Shri Modi lauded him as a beacon of compassion and tireless service, who showed how selfless action can transform society.

In separate posts on X, he wrote:

“Heartfelt tributes to His Holiness Dr. Sree Sree Sree Sivakumara Swamigalu on the special occasion of his Jayanti. He is remembered as a beacon of compassion and tireless service. He showed how selfless action can transform society. His extraordinary efforts across various fields continue to inspire generations.”

“ಪರಮಪೂಜ್ಯ ಡಾ. ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶಿವಕುಮಾರ ಸ್ವಾಮೀಜಿ ಅವರ ಜಯಂತಿಯ ಈ ವಿಶೇಷ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ನಮನಗಳು. ಕಾರುಣ್ಯ ಮತ್ತು ದಣಿವರಿಯದ ಸೇವೆಯ ದಾರಿದೀಪವೆಂದು ಅವರನ್ನು ಸ್ಮರಿಸಲಾಗುತ್ತದೆ. ನಿಸ್ವಾರ್ಥ ಸೇವೆಯು ಸಮಾಜವನ್ನು ಹೇಗೆ ಪರಿವರ್ತಿಸುತ್ತದೆ ಎಂಬುದನ್ನು ಅವರು ತೋರಿಸಿದ್ದಾರೆ. ನಾನಾ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ ಅವರ ಅಸಾಧಾರಣ ಪ್ರಯತ್ನಗಳು ಪೀಳಿಗೆಗಳಿಗೆ ಸ್ಫೂರ್ತಿ ನೀಡುತ್ತಲೇ ಇವೆ.”