கால் மற்றும் வாய் நோய் மற்றும் புரூசெல்லோசிஸ் போன்ற விலங்குகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான விலங்குகள் மூலம் பரவும் நோய்கலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டெம்பர் 11, 2019 அன்று மதுராவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின்போது செயற்கை கருத்தரிப்பு முறை தேசிய திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
திரு. மோடி அவர்கள் பசு குறித்த அறிவியல் மற்றும் உடல் நலம் ஆகியவற்றுக்கான திருவிழாவிற்கு வருகை தந்து பாபுகர் விலங்குகளின் பாலின அடிப்படையிலான விந்து வசதியை தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து 687 மாவட்டங்களிலும் உள்ள விவசாய அறிவியலுக்கான மையங்களிலும் தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை முறையிலான கருத்தரிப்பு, உற்பத்தி போன்றவை குறித்து நடைபெறவிருக்கும் பயிலரங்குகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
கால் மற்றும் வாய் தொடர்பான நோய் மற்றும் ப்ரூசெல்லோசிஸ் ஆகியவற்றுக்கு எதிரான தேசிய விலங்கு நோய்த் தடுப்பு திட்டம் முற்றிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படவிருக்கும் ஒரு திட்டமாகும். இதற்கென, 2019 முதல் 2024 வரையிலான காலத்திற்கு மொத்தம் ரூ. 12,652 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியின் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் விலங்குகளின் மூலம் ஏற்படும் கால் மற்றும் வாய் நோய் மற்றும் ப்ரூசெல்லோசிஸ் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தி 2030-ம் ஆண்டிற்குள் இவற்றை முற்றிலுமாக அழித்தொழிப்பது என்பதையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.