ஜோக்பானி-பிராட்நகரில் அமைக்கப்பட்டுள்ள 2-ஆவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை, பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள பிரதமர் திரு கே பி ஒலியுடன் இணைந்து நாளை (21.01.2020) கூட்டாக தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியா-நேபாள எல்லையில் வர்த்தகம் மற்றும் மக்கள் எளிதில் சென்றுவர ஏதுவாக, ஜோக்பானி-பிராட்நகரில் இந்திய உதவியுடன் 2-ஆவது ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் புனரமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். கூர்கா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 50,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்ற இந்திய அரசின் வாக்குறுதியில், இதுவரை 45,000 வீடுகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
Tomorrow PM @narendramodi and @PM_Nepal Shri K.P. Oli will jointly inaugurate the second Integrated Check Post (ICP) at Jogbani-Biratnagar built with Indian assistance to facilitate trade and people’s movement.
— PMO India (@PMOIndia) January 20, 2020
The first ICP was built in Raxaul-Birgunj in 2018.
Both Prime Ministers will also witness the remarkable progress in GoI assisted post-earthquake housing reconstruction projects in Nepal.
— PMO India (@PMOIndia) January 20, 2020
Out of GoI’s commitment to build 50,000 houses in Gorkha and Nuwakot districts, 45,000 have already been completed.