இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை கலந்து கொள்கிறார்.
இளைய தலைமுறையைச் சேர்ந்த புதிய தொழில் தொடங்குவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் நிறைந்த உலகில், நாளை காலை 9.30 மணி அளவில், மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடிய நிகழ்ச்சியில், அவர்களுடன் தாம் கலந்துரையாட இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தொழில் தொடங்குவதில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோராகக் கருதப்படும் முன்னணி இளம் கண்டுபிடிப்பாளர்களின் கருத்துக்களை நேரடியாகக் கேட்டறிய இந்தக் கலந்துரையாடல் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது.
புதிய தொழில் தொடங்குவது மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. எதிர்காலத்திற்கு தேவையான தொலைநோக்கு மற்றும் வரையறைக்கு அப்பாற்பட்ட சிந்தனைத்திறன் காரணமாக இந்திய இளைஞர்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். நாளைய கலந்துரையாடலின்போது, சிறந்த தொழில் முனைவோரை உருவாக்கும் மையங்கள் மற்றும் முன்னணி மெருகேற்றும் மையங்களிலிருந்து வரும் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக, நாளைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எனது அருமை இளம் நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். கற்றறிந்து, வளர்ச்சியடைந்து, உத்வேகம் அடைய இதுவே மிகச்சிறந்த வாய்ப்பாகும். “நரேந்திர மோடி செல்போன் செயலி” அல்லது டி டி நியூஸ் லைவ் மூலமாக இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கலாம். நீங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் ஏதேனும் இருப்பின், அதனை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.