உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா கண்காட்சி அரங்கில், பெட்ரோடேக் – 2019–ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி 11 பிப்ரவரி 2019 அன்று துவக்கி வைக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றுவார்.
பெட்ரோடேக் – 2019, இந்தியாவின் முன்னோடி ஹைட்ரோகார்பன் மாநாடாக கருதப்படுகிறது. பெட்ரோடேக் – 2019, மத்திய அரசின், மத்திய பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 13-வது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சியாகும்.
2019 பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெற உள்ள இந்த 3 நாள் மாநாடு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் சமீபத்திய சந்தை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பங்குதாரர் நாடுகளைச் சேர்ந்த 95-க்கும் மேற்பட்ட எரிசக்தித் துறை அமைச்சர்கள் மற்றும் சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 7000 பிரதிநிதிகள் பெட்ரோடெக் – 2019-ல் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய கண்காட்சி அரங்கில், சுமார் 20,000 சதுரமீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட உள்ளது. பெட்ரோடெக் 2019 கண்காட்சியில் 13-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரங்குகளும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 750 நிறுவனங்களும் பங்குபெறவுள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த காலத்தில், 12-ஆவது பெட்ரோடெக் – 2016 மாநாட்டை, 2016 டிசம்பர் 5 அன்று பிரதமர் தொடங்கிவைத்தார்.
“இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கான எனது தொலைநோக்கு நான்கு தூண்களைக் கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார்:
எரிசக்தி கிடைக்கச் செய்தல், எரிசக்தி சிக்கனம், நீடித்த எரிசக்தி & எரிசக்தி பாதுகாப்பு.”
பன்னாட்டு ஹைட்ரோகார்பன் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு அழைப்பு விடுத்த பிரதமர், ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதை மாற்றியமைப்பதே தமது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.