பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (மார்ச் 6, 2018) நமது தலைநகரம் புது தில்லியில் உள்ள முனிர்காவில் நடைபெற்றவுள்ள நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை தொடங்கிவைக்கிறார்.
இந்த புதிய கட்டிடம் மூலம் இந்த ஆணையம் ஒரே இடத்தில் இருந்து தனது எல்லா பணிகளையும் மேற்கொள்ளலாம். இதற்கு முன்பு, இந்த ஆணையம் இரண்டு வெவ்வேறு கட்டிடங்களில் வாடைகைக்கு இருந்தது. மத்திய தகவல் ஆணையத்தின் இந்த புதிய கட்டிடம் உலக தரம் வாய்ந்த பசுமை கட்டிடம் ஆகும். இதனை தேசிய கட்டிட கட்டுமான கழகம் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் கட்டி முடித்துள்ளது. மத்திய தகவல் ஆணையத்திற்கு தேவைப்படும் அனைத்து விசாரணை அறைகளும் உலக தரத்தில் அனைத்து தகவல் தொழில் நுட்பம் மற்றும் காணொளி காட்சி வசதிகளுடன் ஐந்து மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் மேல்முறையீட்டு அமைப்பாக நிறுவப்பட்டது.