பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (12.07.2018) புதுதில்லியில் திலக் மார்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் புதிய தலைமையிட கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இந்த புதிய தலைமையிடக் கட்டிடத்தில் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய விளக்கொளியும், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் அடங்கியுள்ளன.
இந்தக் கட்டிடத்தில் 1.5 லட்சம் நூல்களையும் பத்திரிகைகளையும் கொண்ட மத்திய தொல்லியல் நூலகமும் செயல்படும்.