QuotePM to confer Awards for Excellence in Public Administration and address Civil Servants tomorrow

முன்னுரிமையாகக் கண்டறியப்பட்ட திட்டங்களை மிகச் சிறந்த வகையில் செயல்படுத்தியவர்களையும் மாவட்ட, மாநில மற்றும் இதர அமைப்புகளில் புதுமையான செயல்களை நிறைவேற்றியவர்களையும் பாராட்டும் வகையில் சிறப்பு விருதுகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அளிக்கிறார். இதற்கான நிகழ்ச்சி புது தில்லி விஞ்ஞான் பவனில் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரசு அலுவலர்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.

குடிமக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் அமைப்புகள், மாவட்ட நிர்வாக அமைப்புகள், பல்வேறு சிறந்த வகையில் பணியாற்றும் பொது நிர்வாகப் பணியாளர்கள், அலுவலர்களை அங்கீகரித்து, போற்றும் வகையில் பிரதம மந்திரி விருதுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1) பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana), 2) டிஜிட்டல் வழிப் பணப் பரிவர்த்தனையை மேம்படுத்துதல் (Promoting Digital Payments) 3) நகர்ப்புற, கிராமப்புற வீட்டுவசதி மேம்பாட்டுக்கான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana), 4) தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு இந்த விருதுகள் கிடைக்கும்.

இந்த ஆண்டு மேற்கண்ட நான்கு திட்டங்களில் சிறந்த வகையில் பணியாற்றியவர்களுக்கு மொத்தம் 11 விருதுகள், மாவட்டங்கள் உள்பட மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் புதியனவற்றைப் படைத்தவர்களுக்கு அளிக்கப்படும். ஆர்வம் உள்ள மாவட்டத்துக்கு அவற்றில் ஒரு விருது அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி இரு புத்தகங்களைப் பிரதமர் வெளியிடுகிறார். “புதிய பாதைகள்” (New Pathways) என்ற தலைப்பில் ஒரு நூலும், மாவட்டங்களை மாற்றுவதற்கான வழிவகைகளைக் காணும் வகையில் அமைந்த “ஆர்வமுள்ள மாவட்டங்கள்: வெளிப்படும் திறன்கள்” (Aspirational Districts: Unlocking Potentials) என்ற தலைப்பில் ஒரு நூலும் வெளியிடப்படவுள்ளன.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How PM Mudra Yojana Is Powering India’s Women-Led Growth

Media Coverage

How PM Mudra Yojana Is Powering India’s Women-Led Growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 14, 2025
April 14, 2025

Appreciation for Transforming Bharat: PM Modi’s Push for Connectivity, Equality, and Empowerment