புது தில்லி, கிழக்கு கைலாஷில் அமைந்துள்ள இஸ்கான் – இந்திய கலாச்சார பெருமை மையத்தில் பிப்ரவரி 26, 2019 அன்று நடைபெறவுள்ள கீதை ஆராதனை மகா உற்சவத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், உலகிற்காக இஸ்கான் பக்தர்கள் உருவாக்கியுள்ள பகவத் கீதையை பிரதமர் திறந்துவைப்பார். 2.8 மீட்டர் அளவுடைய 800 கிலோ எடையுள்ள இந்த பகவத் கீதை தனிச்சிறப்பு பெற்றது. பகவத் கீதையின் அசல் வசனங்களும் அதன் விளக்கவுரையும் இதில் இடம்பெற்றிருக்கும். இந்த பகவத் கீதையை தொடங்கிவைக்கும் வகையில் பிரதமர் அதன் ஒரு பக்கத்தை திருப்புவார்.
அதன் பின் பிரதமர் அங்குள்ள மக்களிடம் உரையாற்றுவார்.