உலக உயிரி எரிபொருள் தினத்தையொட்டி புதுதில்லி விஞ்ஞான்பவனில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர், மாணவர்கள், அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை சாரந்திருக்க வேண்டிய காட்டயத்தை குறைக்க உயிரி எரிபொருள்கள் பயன்படும். தூய்மையான சுற்றுச்சூழல், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம், கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்த இவை பங்களிக்க முடியும். அதனால், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது, தூய்மை இந்தியா உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உயிரி எரிபொருள்கள் ஊக்கமளிக்கும்.
மத்திய அரசின் முயற்சிகளின் பலனாக, பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் நடவடிக்கையால், 2013-14-ஆம் ஆண்டில் 38 கோடி லிட்டராக இருந்த எத்தனால் விநியோகம், 2017-18-ஆம் ஆண்டில் 141 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.