உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அக்டோபர் 7 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்பு
டெராடூனில் இன்று நடைபெற்ற டெஸ்டிநேஷன் உத்ராகண்ட் முதலீட்டாளர்கள் 2018 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அதிவேகமான மாற்றம் ஏற்பட்டு வரும் காலத்தில் இந்தியா உள்ளது. வரும்காலங்களில் உலக வளர்ச்சியில் இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என்ற கருத்து பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உள்ளது என்று பிரதமர் கூறினார். இத்தகைய பின்னணியில், சுலபமாக தொழில் செய்யும் பட்டியலில், இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். வரி விதிப்பு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் பேசினார். வராக்கடன் மற்றும் திவால் சட்டம் தொழில் செய்வதை சுலபமாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.