பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், 2018, ஜனவரி, 16 அன்று ராஜஸ்தான், பார்மர் மாவட்டம், பச்பத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தின் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மேலும் அவர் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
ராஜஸ்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாரங்களை மிகுந்த அளவில் கொண்டுள்ளது. ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையம், இம்மாநிலத்தின் முதலாவதாகும். அது 9 எம்.எம்.டி.பி.ஏ. சுத்திகரிப்பு-மற்றும்-பெட்ரோகெமிக்கல் வளாகமாக உள்ளது. இந்த சுக்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளிவரும் பொருட்கள் உயரிய பி.எஸ்.6 உமிழ்வு தரத்திற்கு ஏற்ப இருக்கும். இத்திட்டத்தின் உத்தேசமான செலவு ரூ.43,000 கோடியாகும். இத்திட்டம் எச்.பி.சி.எல். மற்றும் ராஜஸ்தான் அரசின் கூட்டுத் திட்டமாகும்.
இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் மற்றும் முதல்வர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.