‘ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு ஜிடோவின் கனெக்ட் 2022’ தொடக்க அமர்வில் 2022 மே 6 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி 10.30 மணிக்கு காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு (ஜிடோ) என்பது உலகம் முழுவதிலும் உள்ள ஜெயினர்களை இணைக்கும் ஒரு உலகளாவிய நிறுவனமாகும்.
ஜிடோ கனெக்ட், பரஸ்பர வலைப்பின்னலையும் தனிப்பட்ட கலந்துரையாடலையும் ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்குவதன் மூலம் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு உதவும் ஒரு முயற்சியாக இது திகழும். ஜிடோ கனெக்ட் 2022 புனேயில் உள்ள கங்காதாம் வளாகத்தில் இம்மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்த பல்வேறு விஷயங்கள் தொடர்பான பல அமர்வுகள் இந்த கருத்தரங்கில் இடம் பெற உள்ளது.