குவஹாத்தியில் நாளை நடைபெறும் அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாடு அசாம் மாநில அரசு மேற்கொண்டுள்ள இதுவரையில்லாத மிகப்பெரிய முதலீட்டு மேம்பாட்டு மற்றும் வசதி முயற்சியாக இருக்கும். இந்த உச்சிமாநாடு முதலீட்டாளர்களுக்கு அசாம் அளிக்கும் புவி&யுக்தி சாதகங்களை எடுத்துக்கூறுவதை நோக்கமாகக் கொண்டதாகும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளரும் பொருளாதாரங்களுக்கு ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மற்றும் சேவைகள் அடிப்படையில் மாநிலம் அளிக்கும் நிரூபிக்கப்பட்ட உற்பத்தி வாய்ப்புகளை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும்.
மின்சாரம், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், நீர் போக்குவரத்து மற்றும் துறைமுக நகரியங்கள், பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், மருந்து உற்பத்தி மற்றும் மருத்துவக் கருவிகள், கைத்தறி மற்றும் கைவினைகள், சுற்றுலா, உபசரிப்பு மற்றும் நல்வாழ்வு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் மாநிலத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் கண்ணோட்டம் கொண்டு இந்த உச்சிமாநாடு எடுத்துக் காட்டும்.