பிரதமர் திரு நரேந்திர மோடி, நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) பிப்ரவரி 17-ஆம் தேதியன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி வாயிலாக உரையாற்றுவார்.
நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றம்:
29-வது நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றம், 2021 பிப்ரவரி 17 முதல் 19 வரை நடைபெறும். இது, மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான தேசியக் குழுவின் (நாஸ்காம்) மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். “மேம்பட்ட இயல்பு நிலையை நோக்கி எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்பது இந்த வருட நிகழ்ச்சியின் கருப்பொருளாகும். 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1600 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்வதுடன், 30-க்கும் அதிகமான பொருட்கள் இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் கண்காட்சிக்கு வைக்கப்படும்.