விக்யான் பவனில் டிசம்பர் 12, 2021 அன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள “முதலில் வைப்பாளர்கள்: ரூ. 5 லட்சம் வரை உத்தரவாதமான காலக்கெடு வைப்புத்தொகை காப்பீடு பரிவர்த்தனை” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாட உள்ளார்.
வைப்புத்தொகை காப்பீடு என்பது இந்தியாவில் செயல்படும் அனைத்து வணிக வங்கிகளிலும் உள்ள சேமிப்பு, நிலையான, நடப்பு, தொடர் வைப்பு போன்ற அனைத்து வைப்பு கணக்குகளையும் உள்ளடக்கியது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மாநில, மத்திய மற்றும் முதன்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத்தொகைகளும் இதில் அடங்கும். வங்கி சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு சிறந்த மைல்கல்லாக, வங்கி வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வங்கியில் ஒரு வைப்பாளருக்கு ரூ. 5 லட்சம் என்ற வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்துடன், கடந்த நிதியாண்டின் இறுதியில் முழுமையாக பாதுகாக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை மொத்த கணக்குகளின் எண்ணிக்கையில் 98.1% ஆக இருந்தது. இது சர்வதேச அளவுகோலான 80 சதவீதம் என்பதையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளின் கீழ் உள்ள 16 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் வைப்புத்தொகையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் சமீபத்தில் இடைக்கால நிதிக்கான முதல் தவணையை அளித்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வைப்பாளர்களின் மாற்று வங்கிக் கணக்குகளுக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப ரூ.1300 கோடிக்கும் மேல் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர், இணை அயமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.