புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 09.04.2018 அன்று நடைபெறும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சி.பி.எஸ்.இ) மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பார்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும், அமைச்சகத்தின் உயர்நிலை அலுவலர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் சிறந்த நடைமுறைகள் குறித்த எதிர்காலத் திட்டங்கள் இந்த மாநாட்டில் இடம் பெறும்.
பெருநிறுவன நிர்வாகம், மனிதவள நிர்வாகம், நிதிநிலைச் சீரமைப்பு, புதிய கண்டுபிடிப்பு போன்ற விஷயங்களில் கருத்து நிலை அறிக்கைகள் பிற்பகலில் பிரதமருக்கு வழங்கப்படும். இதைத் தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் உரையாற்றுவார்.