சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்காக பல உலகத் தலைவர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பதிலளித்து நன்றி தெரிவித்துள்ளார்.
பூட்டான் பிரதமருக்கு அவர் பதில் அளித்திருப்பதாவது:
Thank you @PMBhutan Lotay Tshering for the words of appreciation on Chandrayaan-3. India’s space programme will always do whatever is possible to further global well-being. https://t.co/cpW3vsqlu7
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“சந்திரயான் -3 பற்றிய பாராட்டு வார்த்தைகளுக்கு பூட்டான் பிரதமர் @PMBhutan லோட்டே ஷெரிங்கிற்கு நன்றி. இந்தியாவின் விண்வெளித் திட்டம், உலக நலனை மேம்படுத்துவதற்கு இயன்றவற்றை எப்போதுமே செய்யும்.”
மாலத்தீவுக் குடியரசின் அதிபருக்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:
“அதிபர் இப்ராகிம் முகமது சோலி @ibusolih அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.”
நேபாள பிரதமரின் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் தெரிவித்ததாவது:
Gratitude for your wishes President @ibusolih. https://t.co/VjltpoY0eq
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“வாழ்த்துச் செய்திக்கு நன்றி @cmprachanda”.
நார்வே பிரதமருக்கு அளித்த பதிலில் திரு மோடி கூறியதாவது:
Thank you @cmprachanda for the congratulatory message. https://t.co/axu3nVQCpk
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“உண்மை தான், பிரதமர் @jonasgahrstore. பூமிக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.”
ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:
Indeed PM @jonasgahrstore. Today is a historic day for the planet. https://t.co/sXxDsJpRar
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“நன்றி @HHShkMohd. இந்தியாவின் வெற்றிகள் 140 கோடி இந்தியர்களின் பலம், திறன்கள் மற்றும் உறுதியால் இயக்கப்படுகின்றன.”
ஜமைக்கா பிரதமருக்கு அளித்த பதிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பது பின்வருமாறு:
Thank you @HHShkMohd. India’s successes are powered by the strengths, skills and determination of 140 crore Indians. https://t.co/0rPunTwIjZ
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“நல்வாழ்த்துகளுக்கு நன்றி, பிரதமர் @AndrewHolnessJM.”
மடகாஸ்கர் குடியரசின் அதிபருக்கு அளித்துள்ள பதிலில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
Thank you PM @AndrewHolnessJM for the good wishes. https://t.co/jt2HFrZh8N
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“உங்கள் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி, அதிபர் @SE_Rajoelina. விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றம், வரும் காலங்களில் மனித குலத்திற்கு உண்மையிலேயே பயனளிக்கும்.”
ஸ்பெயின் பிரதமருக்கு பதிலளிக்கையில்,
Grateful for your wonderful words, President @SE_Rajoelina. India’s strides in space will truly benefit humanity in the times to come. https://t.co/BCUFVxSR5u
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“உண்மையில், அறிவியலின் சக்தியின் மூலம், அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. @sanchezcastejon வாழ்த்துகளுக்கு நன்றி”, என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவருக்கு பிரதமர் கூறியிருப்பதாவது:
Indeed, through the power of science, India is working towards a brighter future for all. Thank you for the wishes @sanchezcastejon. https://t.co/Xo00njYQcz
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“அன்பான வார்த்தைகளுக்கு நன்றி @vonderleyen. அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக இந்தியா தொடர்ந்து ஆராய்ந்து, கற்றுக் கொண்டு, பகிர்ந்து கொள்ளும்.”
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு அளித்த பதிலில்,
Thank you @vonderleyen for the kind words. India will continue to explore, learn and share for the betterment of all humankind. https://t.co/igyP5QbyyN
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
“ஷேக் @MohamedBinZayed வாழ்த்துக்கு நன்றி. இந்த சாதனை, இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, மனித முயற்சி மற்றும் விடாமுயற்சியின் கலங்கரை விளக்கமாகும். அறிவியலிலும், விண்வெளியிலும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கட்டும்.”
I thank HH Sheikh @MohamedBinZayed for his wishes. This milestone is not just India's pride but a beacon of human endeavor and perseverance. May our efforts in science and space pave the way for a brighter tomorrow for all. https://t.co/SYhTPtjL3K
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
அர்மீனியா குடியரசின் பிரதமருக்கு பதில் அளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, பிரதமர் @NikolPashinyan.”
Thank you PM @NikolPashinyan for your wishes. https://t.co/mAG4TX5WIq
— Narendra Modi (@narendramodi) August 23, 2023