புது தில்லியில் உள்ள லால் கிலா மைதானம் 15 ஆகஸ்ட் பூங்காவில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.
லவ-குசா ராம்லீலா குழு ஏற்பாடு செய்திருந்த ராம் லீலா நாடகத்தை பிரதமர் பார்வையிட்டார். இந்த விழாவின் போது தீயதை நல்லது வெல்லும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேக்நாத்தின் பெரிய உருவங்கள் எரிக்கப்பட்டதையும் கண்டுகளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் இருந்தனர்.