கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “எய்ம்ஸ் மருத்துவமனையில் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த நமது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் குறுகிய காலத்தில் பணியாற்றியது பாராட்டத்தக்கது. தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொவிட்-19 இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
— Narendra Modi (@narendramodi) March 1, 2021
Remarkable how our doctors and scientists have worked in quick time to strengthen the global fight against COVID-19.
I appeal to all those who are eligible to take the vaccine. Together, let us make India COVID-19 free! pic.twitter.com/5z5cvAoMrv