பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹங்கேரி பிரதமர் திரு விக்டர் ஒர்பானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். உடனடி சண்டை நிறுத்தத்தை அறிவித்து பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
உக்ரைன்-ஹங்கேரி எல்லையில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஒத்துழைத்த ஹங்கேரி அரசுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்து கொண்டார். உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஹங்கேரி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் விருப்பப்பட்டால் ஹங்கேரியில் தங்கள் படிப்பை தொடரலாம் என அவர் கூறினார். அவரது இந்த பெருந்தன்மைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.