பிரதமர் திரு. நரேந்திர மோடி இப்ராஹிம் முகமது சோலிஹுடன் தொலைபேசியில் உரையாடினார். நேற்று நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
திரு. சோலிஹியின் தலைமையில் மாலத்தீவின் மக்களாட்சி வலுப்பெற்று, அமைதியும் வளமையும் பெருகட்டும் என்று பிரதமர் வாழ்த்தினார்.
பிரதமரின் வாழ்த்துகளுக்கு திரு. சோலிஹ் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மிகவும் நெருக்கமான நட்புறவை வலுப்படுத்த இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.