நேபாள நாட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“நான் நேபாளத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் திரு ரோட்டேரியன் மாண்புமிகு கே.பி. சர்மா ஒலியின் அழைப்பின் பேரில் மே 11, 12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறேன்.

இது பிரதமர் என்ற முறையில் நான் நேபாளத்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகும். இப்பயணம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தனிப்பட்ட முறையில் நேபாளத்துடன் கொண்டுள்ள நீண்டகால நெருங்கிய நட்புறவு ஆகும்.

பிரதமர் திரு. ஒலி இந்தியாவுக்கு அரசுமுறையாக கடந்த மாதம் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து நான் இப்பயணத்தை மேற்கொள்கிறேன். “அண்டை நாட்டவர்க்கே முதலிடம்” என்ற கொள்கையில் எனது அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை இத்தகைய உயர்நிலை அளவிலான மற்றும் இடைவிடாத தொடர்புகள் பிரதிபலிக்கின்றன. இது “எல்லோரும் சேர்வோம், எல்லோரும் வளர்வோம்” (SabkaSaath, SabkaVikas) என்ற குறிக்கோளுக்கு இசைவான செயலாகும்.
இரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இரு தரப்பு உறவுகள், முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளன. அத்துடன் இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.
புது தில்லியில் நேபாள பிரதமர் ஒலியும் நானும் பல்வேறு துறைகளில் பரஸ்பர நலன்சார்ந்த விரிவாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளை பெற்றிருக்கிறோம்.

இப்பயணத்தில் காத்மாண்டு நகருக்கு மட்டுமின்றி, ஜனக்பூர், முக்திநாத் ஆகிய இடங்களுக்கும் செல்ல இருக்கிறேன். இரு புண்ணியத் தலங்களுக்கும் ஏராளமான யாத்ரீகர்கள் ஆண்டுதோறும் வருகின்றனர். இவை இரு நாடுகளுக்கும் இடையிலான பண்டைய, வலுவான பண்பாடு கொண்ட, சமய உறவுகளைக் காட்டுகின்றன.
ஜனநாயகத்தை மீட்டுருவாக்கி, வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நேபாளம் புதிய யுகத்தில் நுழைகிறது. இந்த நிலையில் நேபாள அரசுக்கு அனுசரணையான கூட்டாளியாக இருந்து, “வளமான நேபாளம், மகிழ்வான நேபாளிகள்” (Samriddha Nepal, Sukhi Nepali) என்ற தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தியா துணை புரியும்.

நேபாளத்தின் அரசியல் தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். எனது இந்தப் பயணம் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் பரஸ்பர நலன், நல்லெண்ணம், புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் உறவை வலுப்படுத்தும் என்று திடமாக நம்புகிறேன்”
இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Data centres to attract ₹1.6-trn investment in next five years: Report

Media Coverage

Data centres to attract ₹1.6-trn investment in next five years: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 10, 2025
July 10, 2025

From Gaganyaan to UPI – PM Modi’s India Redefines Global Innovation and Cooperation