10-12 நவம்பர் 2016ல் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் செல்கிறேன். பிரதமராக பதவியேற்றபின் இது எனது இரண்டாவது ஜப்பான் பயணம்.
ஜப்பானுடனான நமது உறவு சிறப்பான உத்தி நிறைந்த சர்வதேச கூட்டாக பார்க்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் புத்தமத கலாச்சார ஒற்றுமை, ஜனநாயக பண்புகள், திறந்த, விதிகளுக்கு உட்பட்டு சர்வதேச ஒழுங்கை அமைத்தில் காட்டும் ஆர்வம் என பல ஒற்றுமைகள் உள்ளது
இன்று ஜப்பான் உலகின் முதன்மையான முதலீட்டாளர்களில் ஒன்று. ஆனால் இந்திய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறைய ஜப்பான் நிறுவனங்கள் பல்லாண்டுகளாக இந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன. டோக்கியோவில் இந்தியா மற்றும் ஜப்பானை சேர்ந்த முக்கியமான வணிக தலைவர்களோடு நான் நடத்தப்போகும் பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கும் இடையிலான வணிக, முதலீட்டு உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இருக்கும்
என் பயணத்தின்போது ஜப்பான் அரசரை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும் பிரதமர் ஷின்ஜோ ஆபேவுடன் நவம்பர்11 டோக்கியோவில் நிகழ இருக்கும் சந்திப்பு இருதரப்பு உறவை புதிய பரிமாணத்திற்கு கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
நவம்பர் 12, பிரதமர் ஆபேவும் நானும் புகழ்பெற்ற ஷின்காசென் ரயிலில் கோபே நகருக்கு பயணிக்கிறோம். இதே தொழில்நுட்பம் தான் மும்பை-அகமதாபாத் விரைவி ரயில்தடத்தில் உபயோகிக்கப்பட இருக்கிறது. அதிவேக ரயில் தொழில்நுட்பம் தயாராகும் கவாசாகி தயாரிப்பு நிறுவனத்தையும் பார்வையிட உள்ளோம்.
இந்தியா-ஜப்பான் இடையே அதிவேக ரயில் ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் பரஸ்பரம் நிலவும் உறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. நம் வணிகத்தை இது ஊக்குவிப்பதோடு அல்லாமல், இந்தியாவில் திறன்சார் வேலைவாய்ப்புகள் பெருகவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், நமது ‘மேக் இன் இந்தியா’ கொள்கையை ஊக்குவிக்கவும் உதவும்.