நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், நாட்டுக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் குறித்து, விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியம் நிலவுகிறது. ஆழமான விவாதத்தின்போது, அவையில் அனுபவமிக்க மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கும் மிகச்சிறந்த கருத்துகள் நாட்டுக்கு அதிகப் பலனை அளிக்கக்கூடியதாக அமையும். அரசின் முடிவுகள் மற்றும் கொள்கைகள்மீது, தரமான ஆலோசனைகளையும் அரசால் பெறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற அவைகளின் நேரத்தை அதிகபட்சமாக பயன்படுத்தி, முக்கியப் பணிகளை மேற்கொள்ளமுடியும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து செயல்படும்போது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் உத்வேகம் அளிப்பதாகவும், மாநில சட்டமன்றங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் என்பதை நிரூபிக்கமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளும், இதைச் செய்யும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு முறையும், நான் எனது நம்பிக்கையையும், விருப்பத்தையும் தெரிவிப்பதுடன், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன். இந்த முறையும், நான் எனது நம்பிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கிறேன். நாம் அனைவரும் இதற்காக பாடுபடுவதுடன், அயராத முயற்சிகளையும் மேற்கொள்வோம். எந்த அரசியல் கட்சியோ அல்லது உறுப்பினரோ எழுப்பும் எந்தப் பிரச்சினைக் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இந்த மழைக் காலத்தில், நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை காரணமாக பெரும் சவால்கள் எழுந்துள்ளன. அதேசமயம், இதரப் பகுதிகளில் மழைப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இத்தகைய விஷயங்கள் குறித்து அவையில் விவாதிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
மிக்க நன்றி !
I hope the Monsoon Session is a productive one and the time is properly utilised to discuss important matters: PM @narendramodi at the start of the Monsoon Session of the Parliament
— PMO India (@PMOIndia) July 18, 2018
May the productivity of the forthcoming session and the rich levels of debate also become a source of inspiration for the various state assemblies: PM @narendramodi at the start of the Parliament session
— PMO India (@PMOIndia) July 18, 2018
Any member, any party can raise any issue, we are all ready for proper discussions: PM @narendramodi at the start of the Parliament session
— PMO India (@PMOIndia) July 18, 2018