பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றினார்.
மாநாட்டின்போது பல்வேறு உள்ளீடுகளை வழங்கியதற்காக ஆளுநர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் உத்திகள், ஆதாரங்கள் மற்றும் திறன்களில் பற்றாக்குறையாக இல்லை என்றும், ஆனால் சில மாநிலங்கள் மற்றும் பகுதிகள் ஆட்சியமைப்பின் பற்றாக்குறையால் பின்தங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறினார். ஏழைகள் பயன்பெறுவதற்கான அரசின் பல்வேறு திட்டங்கள் நல்ல ஆட்சியமைப்பு உள்ள பகுதிகளில் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்திரதனுஷ் இயக்கம் போன்ற திட்டங்களை உதாரணமாக சுட்டிக் காட்டிய அவர், அரசின் முனைப்புகளுக்கு அதிக திறனளிக்க ஆளுநர்கள் வழிவகை செய்யலாம் என்றார்.
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்; மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் போன்ற முனைப்புகளில் ஆளுநர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.