எனது அருமை குடிமக்களே,
திரு ஜோதிபா புலேவின் பிறந்த நாளான ஏப்ரல் 11 முதல், ‘தடுப்பூசித் திருவிழாவை' இன்று நாம் துவக்குகிறோம். பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 வரை ‘தடுப்பூசித் திருவிழா' தொடர்ந்து நடைபெறும்.
இந்தத் திருவிழா, ஒரு வகையில், கொரோனாவுக்கு எதிரான மற்றொரு மிகப் பெரும் போரின் துவக்கமாக அமைகிறது. தனிநபர் சுகாதாரத்துடன், சமூக சுகாதாரத்திலும் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நான்கு விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுதல், அதாவது, தடுப்பூசியை போட்டுக் கொள்ள செல்ல முடியாத, போதிய படிப்பறிவில்லாத, வயது முதிர்ந்த மக்களுக்கு உதவுங்கள்.
ஒவ்வொருவரும், பிறர் சிகிச்சை பெறுவதற்கு உதவுதல், அதாவது, தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கான வசதிகள் குறித்து தெரியாதவர்களுக்கோ, அல்லது போட்டுக் கொள்வதற்கான வழி இல்லாத மக்களுக்கோ உதவி அளியுங்கள்.
ஒவ்வொருவரும் பிறரைக் காப்பாற்றுதல், அதாவது, என்னுடைய மற்றும் பிறரது உயிர்களைப் பாதுகாப்பதற்காக நான் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
நான்காவது மிக முக்கிய விஷயம், ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால், 'சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளை' உருவாக்குவதில் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் முன்னின்று செயல்பட வேண்டும். எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறதோ, குடும்ப உறுப்பினர்களும், சமுதாய மக்களும் 'சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளை' அமைக்க வேண்டும்.
இந்தியா போன்று மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ‘சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகள்' மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டிருந்தாலும், நாம் அனைவரும் விழிப்புடன் இருந்து அவருடன் தொடர்புடைய இதர மக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
அதே நேரத்தில், தகுதிவாய்ந்த மக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான ஒவ்வொரு நடவடிக்கையையும் சமுதாயமும், நிர்வாகமும், மேற்கொள்ள வேண்டும்.
ஒரு தடுப்பூசி கூட வீணாகாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி வீணாகாத நிலையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
அதேவேளையில், நாட்டில் தடுப்பூசியின் திறனை மிக அதிகமாக பயன்படுத்தும் முயற்சியில் நாம் முன்னேற வேண்டும். இதன் மூலம் நமது ஆற்றலையும் அதிகரிக்க முடியும்.
‘சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகள்' பற்றிய நமது விழிப்புணர்வால் நம் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
தேவையில்லாத போது வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது, நமது வெற்றியை தீர்மானிக்கும்.
தகுதி வாய்ந்தவர்கள், தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் நமது வெற்றி முடிவு செய்யப்படும்.
முகக் கவசங்களை அணிந்து இதர வழிமுறைகளை நாம் பின்பற்றுகிறோமா என்பதன் அடிப்படையிலும் நமது வெற்றி அமையும்.
நண்பர்களே,
இந்த நான்கு நாட்களில், தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், நிர்வாக அளவிலும் நமது இலக்குகளை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் பங்களிப்பு, பொறுப்புகளை நிறைவேற்றுவது ஆகியவற்றுடன் விழிப்புடன் இருப்பதன் வாயிலாக கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மீண்டும் நாம் வெற்றி அடைவோம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
நினைவில் கொள்ளுங்கள்– மருந்து மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றுதல்.
நன்றி!
உங்கள்,
நரேந்திர மோடி
आज से हम सभी, देशभर में टीका उत्सव की शुरुआत कर रहे हैं। कोरोना के खिलाफ लड़ाई के इस चरण में देशवासियों से मेरे चार आग्रह हैं… https://t.co/8zXZ0bqYgl
— Narendra Modi (@narendramodi) April 11, 2021