புதுதில்லியில் நேற்று நடைபெற்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், கிர்கிஸ் குடியரசின் அதிபர் திரு சூரன்பே ஷாரிப்போவிக் ஜீன்பிகாவ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு தற்போது தலைமை ஏற்றிருக்கும் கிர்கிஸ்தான், மத்திய ஆசியாவில் இந்தியாவோடு இணைந்து முக்கிய பங்களிக்கிறது. பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த அதிபர் ஜீன் பிக்காவ், கிர்கிஸ்தானில் ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கி 15-ம்தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு பிரதமரிடம் தனது அழைப்பை நினைவுப்படுத்தி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியாவிற்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையேயான நட்புறவை நினைவு கூர்ந்த பிரதமர், ஆண்டு ஆண்டு காலமாக இருதரப்பு ஒத்துழைப்பு வலுவடைந்து வருவது குறித்து திருப்தி தெரிவித்தார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றதற்கு அதிபர் ஜீன் பிக்காவ்-க்கு நன்றி தெரிவித்த பிரதமர், கிர்கிஸ்தானுக்கு வருகை புரிவதற்கு தமக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, அப்பயணத்தை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
Getting down to work after the oath-taking ceremony...PM @narendramodi held wide-ranging talks with President Sooronbay Jeenbekov of the Kyrgyz Republic. The two leaders held deliberations on diversifying cooperation for the mutual benefit of citizens of both nations. pic.twitter.com/JQM741BxSk
— PMO India (@PMOIndia) May 30, 2019
Held extensive deliberations with the President of the Kyrgyz Republic, Mr. Sooronbay Jeenbekov. Our talks covered the full spectrum of bilateral ties between our nations and ways to deepen economic and social cooperation in the times to come. pic.twitter.com/1BB65stzEb
— Narendra Modi (@narendramodi) May 30, 2019