பிரதமர் திரு.நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் திரு டோனி அபோட் இன்று சந்தித்தார்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட புதர்த்தீயால், உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்தார்.
குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி, பொற்கோவிலுக்கு வருகை புரிவது உள்ளிட்ட திரு.டோனி அபோட்டின் இந்தியப் பயணம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள தாம் சென்றதை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். அந்தப் பயணத்தின் போது, கான்பெர்ரா, சிட்னி, மெல்பர்ன் ஆகிய இடங்களில் நடைபெற்ற பயன்மிகு இருதரப்பு நிகழ்ச்சிகள், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தாம் உரை நிகழ்த்தியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்துவதில் திரு.டோனி அபோட் முக்கியப் பங்காற்றியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
Had an excellent interaction with my friend, @HonTonyAbbott. Great to see his passion and energy on issues he believes in. He is a strong votary for deepening India-Australia cooperation. pic.twitter.com/raCh9cplGE
— Narendra Modi (@narendramodi) November 20, 2019