மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் 380 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களுடன், நான்கு குழுக்களாக கலந்துரையாடல் நடத்தினார். அக்டோபர் 2017-ல் பல்வேறு தேதிகளில் இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இவற்றில் கடைசி கலந்துரையாடல் 17, அக்டோபர் 2017ல் நடைபெற்றது. ஒவ்வொரு கலந்துரையாடலும் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
நிர்வாகம், ஊழல், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு இ-சந்தைப் பகுதி, உடல்நலம், கல்வி, திறன் மேம்பாடு, வேளாண்மை, போக்குவரத்து, தேசிய ஒருமைப்பாடு, நீர்வளங்கள், தூய்மை பாரதம், கலாச்சாரம், தகவல் தொடர்பு மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைப் பற்றி இந்தக் கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் முழு அர்ப்பணிப்புடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். திரைமறைவு வேலைகள்தான் மத்திய அரசின் செயல்பாட்டில் பெரிய இடையூறாக இருக்கிறது என்று அவர் கூறினார். திரைமறைவு முயற்சிகளை முறியடிப்பதற்கு புதுமையான வழிமுறைகளைக் கையாளுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதன்மூலம் நிர்வாகத்தின் பல்வேறு நடைமுறைகளை வேகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நல்ல பலன்களைப் பெறும் வகையில் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அளவில் உள்ள அதிகாரிகள் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவைச் செயலக மூத்த அதிகாரிகளும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.