நீம்ரானா மாநாடு 2016ல் பங்கேற்க உள்ள அறிஞர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
பேரிய பொருளியல், வாணிபம், நிதிக் கொள்கை, போட்டித்தன்மை, உற்பத்தித்திறன் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது. உலகளாவிய ஆராய்ச்சியில் இருந்து யோசனைகளும் இதில் இடம்பெற்றன.
பிரதமர் தனது உரையின்போது, பேரியல் பொருளாதார கொள்கை, விதிமுறைகளுக்கு உட்பட்ட பன்முக வாணிப ஏற்பாடுகள், பொறுப்பா பருவநிலைக் கொள்கை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமையை ஒழிக்கும் வளர்ச்சிக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டார். விவசாயம் சார்ந்த உற்பத்தித்திறனை ஊக்கப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கொடுத்து வரும் கவனம் குறித்தும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார்.