சார்பு செயல்திறன் அரசு நிர்வாகம் மற்றும் உரிய நேரத்தில்நடைமுறைப்படுத்துவதற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப, பன்முக மாதிரி மேடையான பிரகதி மூலம் தனது இருபத்தி எட்டாவது கலந்துரையாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேற்கொண்டார்.
வருமான வரி தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதில் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளித்தனர். அனைத்து அமைப்பு ரீதியான பணிகளும் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட வேண்டும் எனவும் மனித தலையீடுகள் குறைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மக்களுக்கு சௌகரியம் அளிப்பதற்காக வருமான வரித்துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் உரிய முறையில் வரி செலுத்துவோருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.
இதுவரை நடைபெற்ற 27 பிரகதி கூட்டங்களிலும் ரூ. 11.5 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு துறைகளில் பொது மக்கள் குறைபாடுகளுக்கான தீர்வுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இன்றைய இருபத்தி எட்டாவது கூட்டத்தில் பிரதமர் ரயில்வே, சாலை மற்றும் பெட்ரோலியத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒன்பது முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். இந்தத் திட்டங்கள் ஆந்திரப் பிரதேசம், அசாம், குஜராத், தில்லி, அரியானா, தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயுஷ்மான் பாரத் கீழ், தொடங்கப்பட உள்ள பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். பிரதமர் மக்கள் மருந்து வழங்கும் திட்ட முன்னேற்றம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.