தாய்லாந்து பயணத்திற்கு முன் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்
“நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டிலும், நவம்பர் 4 அன்று நடைபெற உள்ள 14-வது கிழக்காசிய உச்சி மாநாட்டிலும், மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டிலும் பங்கேற்க நாளை நான் பாங்காக் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறேன்.
இந்தப் பயணத்தின் போது, இந்த உச்சி மாநாடுகளிலும் இது தொடர்பான உச்சநிலை கூட்டங்களிலும் பங்கேற்க பாங்காக் வரும் உலகத் தலைவர்களையும் நான் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசவிருக்கிறேன்.
ஆசியான் தொடர்பான உச்சி மாநாடுகள், நமது தூதரக அட்டவணையின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளன. மேலும் நமது கிழக்குப் பகுதி நாடுகளுக்கான கொள்கையிலும் முக்கிய அம்சமாக உள்ளன.
ஆசியான் உடனான நமது உறவுத் தொடர்புகளை வலுப்படுத்துதல், திறன் கட்டமைப்பு, வர்த்தகம், கலாச்சாரம் ஆகிய முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரி மாதத்தில் ஆசியான் உடனான நமது பேச்சுவார்த்தை பங்களிப்பின் 25-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு சிறப்பு கவனத்திற்குரியதாகும். ஆசியான் நாடுகளை சேர்ந்த 10 தலைவர்களும் நமது குடியரசுத் தினத்திற்கு தலைமை விருந்தினர்களாக கவுரவிக்கப்பட்டனர்.
ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் நமது கூட்டுறவு செயல்பாடுகள் குறித்து, நான் ஆய்வு செய்யவிருக்கிறேன். ஆசியான் அமைப்பை வலுப்படுத்துவது பற்றிய திட்டங்களையும் நான் ஆய்வு செய்வேன். ஆசியான் தலைமையேற்கும் வழிமுறைகள், தொடர்புகளை விரிவுபடுத்தும் (கடல், நிலம், காற்று, டிஜிட்டல், மக்களோடு மக்கள்) பொருளாதார பங்களிப்புகளை ஆழப்படுத்தும் கடல்சார் ஒத்துழைப்பும் விரிவடையும்.
இந்தப் பிராந்தியத்தின் கூட்டுறவில் தனியாகத் தலைமையேற்கும் அமைப்பாக உள்ள ஆசியான் அமைப்பில், தலைவர்கள் தலைமையிலான கட்டமைப்போடு இந்தப் பகுதியில் உள்ள பெரிய நாடுகளை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வது அல்லது அதற்குள்ளான முக்கிய விருப்பத்தை வெளிப்படுத்துவது இன்றைய கிழக்காசிய உச்சி மாநாட்டின் முக்கிய விஷயமாக இருக்கும். கிழக்காசிய உச்சி மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் முக்கியத்துவம் வாய்ந்த, மண்டல மற்றும் உலக விஷயங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்யவிருக்கிறோம். மேலும் நமது தற்போதைய அரசு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யவிருக்கிறோம். இந்தோ-பசிபிக் உத்திகள் மீது நான் கவனம் செலுத்தவிருக்கிறேன். கிழக்காசிய உச்சிமாநாட்டில் ஆசியான் பங்குதாரர்களுடனும், மற்றவர்களுடனும் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான பொருளாதார கூட்டாளிகள் உச்சி மாநாட்டில் இந்த அமைப்பின் உரையாடல் முன்னேற்றம் குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம். சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீடுகளில் இந்தியாவின் கவலைகளையும், நலன்களையும் பற்றி நாங்கள் ஆய்வு செய்வோம். இந்த உச்சி மாநாட்டின் போது இவையும் முழுமையாக இணைத்துக் கொள்ளப்படும்.
நீடித்த தன்மை குறித்த ஆசியான் அமைப்பின் தலைவராக உள்ள தாய்லாந்து பிரதமர் நவம்பர் 4 அன்று ஏற்பாடு செய்துள்ள தலைவர்களுக்கான முக்கிய மதிய உணவில் பங்கேற்பது உள்ளிட்டதாக எனது பயணத்தின் பிற அம்சங்கள் இருக்கும்.
நவம்பர் 2-ந் தேதி தாய்லாந்தில் இந்திய சமூகத்தவர் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ளவிருக்கிறேன். இந்திய வம்சாவளியினரும், வெளிநாடுவாழ் இந்தியர்களும் தாய்லாந்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளனர். இந்தியாவும் முக்கியமான உறவு குறித்து தாய்லாந்துவுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.