பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இன்று மத்திய அரசின் முன்னோடி பாசனத் திட்டமான, பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த அலுவலர்கள் தவிரவும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி ஆயோக் சேர்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர்.
99 முதன்மை பாசனத் திட்டங்களில், 5.22 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசனம் பெறும் வகையிலான 21 திட்டங்கள், ஜூன், 2017-க்குள் நிறைவேற்றப்படும்.
மகராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கூடுதல் 45 முன்னுரிமைத் திட்டங்கள், நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதுடன், குறிப்பிட்டகாலக் கெடுவிற்குள் அவை நிறைவேற்றப்படும்.
வரவிருக்கின்ற இத்திட்டங்களில் அலுவலர்கள், சொட்டுநீர் மற்றும் நுண்ணிய பாசனத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். இத்திட்டங்களினால் பயன்பெறும் நிலங்களில், திறமையான பயிர் விளைவிக்கும் முறைகள் மற்றும் நீர் பயன்பாட்டு முறைகள் குறித்து பல்வேறு அரசுத் துறைகள், விவசாய அறிவியல் மையங்கள் மற்றும் விவசாய பல்கலைக்கழங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட அவர் கேட்டுக் கொண்டார்.
அலுவலர்கள், பிரதம மந்திரி விவசாய பாசனத் திட்டத்தில் விரிவான மற்றும் முழுமையான பார்வையுடன் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். பாசனத் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக, வான் செயலிகள் உள்ளிட்ட, நவீனமாக கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் அவர், கேட்டுக் கொண்டார்.