பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த “டைம்லெஸ் லக்ஷ்மன்” என்ற நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (18.12.2018) வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், காலமற்ற இந்தப் பயணத்தில் தானும் அங்கம் வகிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். லக்ஷ்மனின் சித்திரங்கள் என்ற பெரும் பொக்கிஷம் தற்போது இந்த வடிவத்தில் கிடைப்பது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பல ஆண்டுகள் தொடர்ந்து வரைந்துள்ள லக்ஷ்மனின் சித்திரங்கள் வாயிலாக, அந்த காலத்து சமூகவியலையும், சமூக பொருளாதார நிலையையும் அறிந்து கொள்வது அருமையான விஷயம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியானது லக்ஷ்மனுக்கோ, அவரது நினைவுக்கோ மட்டுமானதல்ல, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் லக்ஷ்மனின் சிறிய பகுதியை சேர்ப்பதும் கூட என்று பிரதமர் தெரிவித்தார்.
பத்ம விருதுகளின் நோக்கமானது எளிய மனிதனை நோக்கி குவியுமாறு எங்ஙனம் மாறியது என்பதையும் பிரதமர் கூறினார்.