தேசிய அறிவியல் மையத்தில், “இந்தியாவை ஒருங்கிணைத்தல்- சர்தார் பட்டேல்” என்ற இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கண்காட்சியை பிரதமர் மோடி வியாழன் அன்று ஆய்வு செய்தார்.
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் அதற்கு சர்தார் பட்டேலின் பங்களிப்பு ஆகியவை குறித்த இந்த டிஜிட்டல் கண்காட்சி பிரதமரின் எண்ணத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
30 நிரல்களும், 20 வகையான இருவழி தொடர்பு மற்றும் மீடியா பயன்பாடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒருங்கிணைப்பில் சர்தார் பட்டேலின் பங்களிப்பு குறித்து பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு வகையான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி அணிய தேவையற்ற முப்பரிமாண படங்கள், ஹோலோகிராஃபிக் புரொஜக்ஷன்கள், நகரும் புரொஜக்ஷன்கள், விழிபார்வை சார்ந்த வர்சுவல் ரியாலிடி அனுபவங்கள் ஆகியவை இந்த கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான ஆவணங்களை தேசிய ஆவண பாதுகாப்பு மையத்தின் வாயிலாக கலாச்சார அமைச்சகம் வழங்கியுள்ளது. கண்காட்சியை வடிவமைக்கும் பணி தேசிய வடிவமைப்பு மையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2016 அக்டோபர் 31 ந் தேதி சர்தார் பட்டேல் பிறந்தநாள் விழாவின் போது இந்த கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.