மேதகு பிரதம மந்திரி டத்தோ திரு.முகமது நஜீப் பின் துன் அப்துல் ரசாக்,
ஊடக உறுப்பினர்களே,
மேதகு மலேசிய பிரதம மந்திரி அவர்களை இந்தியாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மேதகு நஜீப் அவர்களே, நான் 2015, நவம்பரில் மலேசியாவிற்கு வருகை புரிந்தபோது நான் பெற்ற அன்பு மற்றும் நன்மதிப்பை இந்திய மக்கள் திரும்ப செலுத்தும் வாய்ப்பை உங்களது வருகை அளித்துள்ளது. நமது உறவுகளின் வரலாற்று சிறப்புமிக்க காலக்கட்டத்தில், உங்களது வருகை அமைந்துள்ளது. நம்மிடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 60வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். மற்றும் மேதகு பிரதம மந்திரி அவர்களே, உங்களது தனிப்பட்ட கவனம் மற்றும் தலைமைப்பண்பு ஆகியவை நமது உறவுகளில் நிலையான திசை, வலிமை மற்றும் உயிர்ப்பிற்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளன. உங்களது பங்களிப்புகள், இந்தியாவுடனான பரந்த மூலோபாய கூட்டு ஏற்படுவதற்கு கருவியாக உள்ளன.
நண்பர்களே,
மலேசியாவுடனான நமது உறவுகள் மிகவும் தொன்மையானதும், வரலாற்றுபூர்வமானதும் ஆகும். நமது உறவுகள் உயர்வானதும், பன்முகத்தன்மையுதும் ஆகும். பல நிலைகளில் நமது சமூகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கலாச்சாரம் மற்றும் மத உறவுகள் நமது மக்களிடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தியுள்ளன. மலேசியாவில் அதிகளவிலான இந்திய சமூகத்தின் பங்களிப்புகள் சிறப்பான மதிப்பு மிக்கதாகும். அவை நமது பகிரப்பட்ட பராம்பரியத்தை மட்டும் பேணவில்லை. நமது இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம் மற்றும் மக்களுடன் மக்களுக்கு இடையேயான தொடர்பிற்கு அவை வலிமையான ஊக்கியாக உள்ளன. எனது கடந்த பயணத்தின்போது, பிரதம மந்திரி திரு.நஜீபும், நானும் கூட்டாக கோலாலம்பூரில் தோரண வாயிலை துவக்கி வைத்தோம். சாஞ்சி ஸ்தூபியை போன்ற வடிவமைப்பை கொண்ட தோரண வாயில், நமது நிரந்தர நட்புறவின் அடையாளமாக விளங்குகிறது.
நண்பர்களே,
இன்றைய எங்களது விரிவான உரையாடலில், பிரதம மந்திரி நஜீபும், நானும், நமது கலாச்சார, பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். 2015, நவம்பரில் எனது மலேசிய பயணத்தின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை அறிந்துக் கொண்டதுடன், நமது மூலோபாய கூட்டுகளை உயர்த்துவதற்கு பகிர்வு பார்வை செலுத்தவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். செயல் சார்ந்த அணுகுமுறையை விட பார்வை முதன்மையானதாகும். இந்த முயற்சியில், தற்போதுள்ள கூட்டுறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் புதிய வாய்ப்புகளை கண்டறிவது ஆகியவை எங்களது முக்கிய நோக்கங்களகவும் உள்ளன.
நண்பர்களே,
இந்தியாவும், மலேசியாவும் வெற்றிகரமான பொருளாதார கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளன. அதனை மேம்படுத்தும் எங்களது முயற்சியாக, உலகின் விரைந்து வளர்ந்து வரும் பொருளாதாரமாக, இந்தியா ஈடில்லா வாய்ப்புகளை அளிக்கிறது. நமது சமூகங்கள் வளம் பெறுவதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தையும், மூலதன வரவையும் விரிவுபடுத்த தயாராக உள்ளோம். உள்கட்டமைப்பு, எங்களுக்கிடையே மிகுந்த பயனளிக்கக்கூடிய கூட்டாக அமைந்துள்ளது. ஆனால், அதையும் விட நாங்கள் அதிகமாக செய்ய இயலும். இந்தியாவின் உள்கட்டமைப்பு தேவைகள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் குறிக்கோளுடனான நமது பார்வை ஆகியவை, மலேசியாவின் தகுதிகளுக்கு நன்கு ஈடுகொடுப்பதாக உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நமது பெரும்பாலான உள்கட்டமைப்புத் திட்டங்களில் மலேசிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய நிறுவனங்களும் பெருமளவில் பங்கேற்று மலேசிய பொருளாதாரத்தில் முதலீடு செய்துள்ளன. பிரதம மந்திரி திரு. நஜீப் அவர்களுடன் உயர்மட்ட அளவிலான வியாபார குழு வந்துள்ளதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் ஏற்படுத்தும் வியாபார கூட்டுகள், நமது வணிகரீதியிலான பங்கேற்பின் நிலையையும், முக்கியத்துவத்தையும் உயர்த்தும் என நான் நம்புகிறேன். நமது விவசாயிகளின் நலனுடன் தொடர்புடைய உணவு பாதுகாப்பை குறிக்கோளாக கொண்ட முயற்சிகளை நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம். மலேசியாவில் உரத் தொழிற்சாலை உருவாக்குவதல் மற்றும் மலேசியாவிலிருந்து அளவுக்கதிமான உரத்தை இந்தியாவிற்கு எடுத்துக் கொள்ளுதல் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை மிகவும் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும்.
நண்பர்களே,
மரபார்ந்த மற்றும் மரபுசாரா பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் காலத்திலும், பிராந்தியத்திலும் நாம் வாழ்ந்து வருகிறோம். பிரதம மந்திரி திரு.நஜீப் அவர்களும், நானும், இத்தகைய சவால்கள், நமது நாடுகள் மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தல்களாக உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளோம். மற்றும், நாங்களும் மற்றும் இந்த பிராந்தியத்தின் பிற நாடுகளும் ஒன்றாக பாடுபடுவது தேவையாக உள்ளது. இவ்வகையில், தீவிரவாதத்திற்கு எதிரான நமது கூட்டுச் செயல்களில் மலேசிய அரசாங்கத்துடனான நமது தொடர் கூட்டுறவை நான் பாராட்டுகிறேன்.
மேதகு பிரதம மந்திரி அவர்களே,
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உங்களது தலைமை ஒட்டுமொத்த இப்பிராந்தியத்திற்கும் உணர்வூட்டக்கூடியதாக உள்ளது. நமது பரந்த பாதுகாப்பு கூட்டு நமது ஆயுதப்படைகளுக்கு இடையே நெருக்கத்தை கொண்டு வந்துள்ளன.
நாங்கள் கூட்டுறவாக செயல்படுகிறோம்:
• பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு;
• சாதனம் மற்றும் இராணுவ வன்பொருள் பராமரிப்பு;
• கடற்சார் பாதுகாப்பு; மற்றும்
• பேரிடர் உதவி
பிரதம மந்திரி திரு.நஜீப் அவர்களும், நானும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக அதன் கடற்பரப்புகளில், பொருளாதார வளமை, திசை செலுத்துதலில் சுதந்திரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான எங்களது பங்கு மற்றும் பொறுப்புடைமை குறித்து அறிந்துள்ளோம். எங்களது சமூகங்களையும், பிராந்தியத்தின் அதிகளவிலான நன்மையை பாதுகாக்கும் வகையில், நமது பொது பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு நன்மையளிக்கக்கூடிய தீர்வு காண்பதற்கான மூலோபாய கூட்டுக்களை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.
மேதகு பிரதம மந்திரி திரு.நஜீப் அவர்களே,
உங்களை இந்தியாவிற்கு மீண்டும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மிகுந்த பயனளிக்கக்கூடிய கலந்துரையாடல்களுக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நமது முடிவும், நமது தளத்தகை கூட்டாண்மையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் ஊக்கியாக விளங்கும் என நான் நம்புகிறேன். இந்தியாவில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், பயனளிக்கக்கூடிய வகையிலும் தங்கியிருக்க நான் வாழ்த்துகிறேன்.
நன்றி.
மிக்க நன்றி.
PM begins press statement by welcoming PM @NajibRazak ; compliments his personal contribution to Strategic Partnership b/w India & Malaysia pic.twitter.com/UkSjAlAfKx
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM @narendramodi stresses PM @NajibRazak visit historic, taking place in 60 years of diplomatic relations.
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM @narendramodi on Torana Gate in Malaysia: Modelled on the Torana Gates of the Sanchi Stupa, this stands as symbol of our abiding friend'p
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM @narendramodi : We agreed on a shared vision to enhance our strategic partnership. A vision that prioritizes an action oriented approach
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM: We have agreed to further strengthen our strategic partnership to shape an effective response to our common concerns & challenges
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM on bilet'l eco. partner'p: India’s infrastructure needs & our ambitious vision of dev'ping Smart cities match well w/Malaysian capacities
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM on Malaysian business delg'n: I am confident that business partner'ps that they forge will enhance level & momentum of our comer'l engm't
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM @narendramodi lauds cooperation in sectors of food security, traditional medicine and educational exchanges
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM on security threats: I deeply appreciate our continuing cooperation with the Malaysian government in our joint anti-terrorism efforts
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM @narendramodi on wide-ranging bilateral defence partnership pic.twitter.com/MlTJO38uCl
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017
PM @narendramodi concludes: I am confident that our decisions today will drive our strategic partnership to the next level pic.twitter.com/hvaTjMqOio
— Gopal Baglay (@MEAIndia) April 1, 2017